மனைவியை நட்சத்திரமாக்க நிதி மோசடி செய்த சிங்கப்பூர் திருச்சபைத் தலைவர்.(BBC Tamil News)

15/11/2015 08:48

மனைவியை நட்சத்திரமாக்க நிதி மோசடி செய்த சிங்கப்பூர் திருச்சபைத் தலைவர்.(BBC Tamil News)

4 மணி நேரங்களுக்கு முன்னர்
பகிர்க
மனைவியுடன் கொங் ஹீImage copyrightAP
Image caption
மனைவியுடன் கொங் ஹீ
சிங்கப்பூரின் மிகப்பெரிய திருச்சபை ஒன்றின் ஆறு பொறுப்புதாரிகள், மோசடி வேலைகள் செய்ததாக நீதிமன்றம் ஒன்று குற்றத்தை உறுதிசெய்துள்ளது.

'சிட்டி ஹார்வெஸ்ட்' என்ற திருச்சபையின் தோற்றுநரான கொங் ஹீ, தனது மனைவியை ஒரு பாப் இசை நட்சத்திரமாக மாற்றுவதற்காக செய்த பலன் அளிக்காத முயற்சிகளில் செலவுசெய்வதற்காக திருச்சபை நிதியிலிருந்து ஒருகோடியே எழுபது லட்சம் டாலர்களை, ஹீயும் அவருடைய திருச்சபை சகாக்கள் வேறு ஐந்து பேருமாக சேர்ந்து கையாடியிருந்தனர் என்று குற்றங்காணப்பட்டுள்ளது.

தாங்கள் செய்த தப்பு வெளியில் வரக்கூடாது என்பதற்காக மேலும் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் டாலர்களை அவர்கள் பயன்படுத்தியிருந்தனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவரல்லாதவர்களை தாம் ஈர்ப்பதற்கான வழி இசைதான் என்று இத்திருச்சபையினர் வாதிட்டனர், ஆனால் அந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.