வேதாகமத்தின் நிகழ்வுகள்
அநேக நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் உலகத்திலே வேறு யாருக்கும் நடக்க வில்லை என்று நாம் நினைப்பது உண்டு. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் ஏற்கனவே இப்படிப்பட்ட காரியங்கள் நடந்திருப்பதும் அது நடப்பதற்குரிய காரியங்களும். இப்படிப்பட்ட காரியங்களை மேற்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக கர்த்தர் வேதாகமத்தின் மூலமாக கற்று கொடுத்துள்ளார்.
வேதாகமத்தை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும். வேதாகமத்தின் சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் நாம் கற்றுக்கொள்ளும் பொழுது ஒரு ஒட்டு மொத்த கருத்து (common idea) கண்டிப்பாக தெரியும். பரிசுத்த வேதாகமத்தின் ஆசிரியர் நம்முடைய தேவனே. 40 தேவனுடைய பிள்ளைகளை கொண்டு தேவன் எழுதினார். இது 66 புத்தகங்களை உள்ளடக்கியது. உலகத்தின் படைப்பும் அதற்கு பின்பு நடந்து கொண்டிருக்கிற மற்றும் நடக்கப்போகிற காரியங்கள் தெளிவாக பரிசுத்த வேதாகமத்தில் உண்டு. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஆண்டவர் தேவ பிள்ளைகள் மூலமாக உணர்த்தின அல்லது தீர்க்கதரிசனம் உரைத்த அனைத்தும் அதினதின் காலக்கட்டத்திலே நடந்தது.
1. படைப்பு (ஆதி 1- 2)
நம்முடைய ஆதி மனிதர் யார் என்று கேட்டால் இந்த உலகத்திலுள்ள எல்லாருக்கும் சட்... என்று ஞாபகம் வருவது ஆதாம் ஏவாள். இவர்களின் படைப்பைக்குறித்தும் அண்டசராசரங்களின் படைப்பையும் ஆதியாகமத்தில் பார்க்க முடியும்.
2. பாவம் பிரவேசித்தல் (ஆதி 3)
ஆண்டவரோடு உறவாடிக்கொண்டிருந்த மனிதன் தேவனுக்கு கீழ்படியாமல் பாவம் என்ற பள்ளத்தாக்கில் வீழ்ந்தான்.. இதுமுதற்கொண்டு பாவம் மனிதனுக்குள் பிரவேசித்தது. பாவம் மனி தனை தேவனிடத்திலிருந்து பிரிக்கும் சுவராக மாறியது. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (ஏசா59:2) அப்பொழுதே இரட்சகரைக்குறித்தும் வாக்குப்பண்ணப்பட்டது. (ஆதி 3:15)
3. நோவாவின் பேழை (ஆதி 6- 11)
பெருகியது பெருகியது வௌ;ளம் போல ‘பாவம்’, நோவாவின் காலத்தில் ஜனங்கள் செய்த அதிக பாவத்தினிமித்தம் தேவனை மனம் கசக்கப்பண்ணினார்கள். தேவன் உலகத்தை அழிக்க முற்படும் பொழுது… ஒருவர் மாத்திரம் தேவனுடைய பார்வையில் கிருபைபெற்றார் அவர்தான் நோவா தாத்தா.. அவர் தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
அவர் மூலமாக ஒரு பேழை உண்டாக்கப்பட்டது. அப்பொழுது அநேகருக்கு நீதியைக் குறித்து பிரசங்கித்தார் யாரும் அதை ஏற்றுக்கொண்டு பேழைக்குள் வரவில்லை 2பேது2:5 ஆகவே ஜனங்கள் மரணத்தை ருசிபார்த்தார்கள். இந்த பேழையானது இப்பொழுது உள்ள தேவ சபையை குறிக்கிறது. யாரெல்லாம் இதற்குள் வருவார்களோ அவர்கள் இயேசுகிறிஸ்துவின் ரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இந்த அழிவுக்கு பிற்பாடு ஆண்டவர் நான் நீரினால் அழிக்க மாட்டேன் என்று சொல்லி வானவில் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இனி வானவில்லைப்பார்த்ததும் நோவின் பேழை ஞாபகத்திற்கு வரும்தானே!
4. பாஷைகள் எப்படி உருவானது?
மேலும் பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் தாம் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று சுய நோக்கத்தோடும் மற்றும் உருவாக்கிய ஆண்டவரை மறந்த படியினாலும் கர்த்தர் ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார். அப்படியே அனேக பாஷைகன் தோன்றிற்று. எப்படி அநேக பாஷைகள் உலகத்தில் தோன்றிற்று என்று யாராவது கேட்டால் பதில் சொல்ல ஆயத்தமாகிவிட்டீர்களா!
5. ஆபிரகாம் அழைப்பு (ஆதி 12)
விசுவாச தந்தை யார் என்றால் தெரியாதவரே இல்லை எனலாம். இந்த ஆபிரகாமைதான் (Abraham) இஸ்லாமிய மதத்தார் இப்ராகிம் (Ibrahim) என்று சொல்கிறார்கள்
தேவன் இவரை தெரிந்துகொண்டு தெய்வீக அழைப்பைக்கொடுத்து ஆசீர்வதித்து இவருடைய ஜனங்களை தனக்கு சொந்த ஜனமாக அங்கீகரித்தார். தன்னுடைய நூறு வயதில் பிறந்த ஏக குமாரனாகிய ஈசாக்கையும் தேவனுக்கு பலிகொடுக்க தன்னை அர்ப்பணித்தபடியினால் இவருடைய விசுவாசத்தை கர்த்தர் கனப்படுத்தினார். ஆகவே நம்முடைய விசுவாசத்தின் தந்தையாக மாறினார். ஈசாக்குக்கு பிறந்த இரண்டு குமாரர்களான ஏசா மற்றும் யாக்கோபு.. இதில் கர்த்தர் யாக்கோபை தெரிந்து கொண்டு இஸ்ரவேல் என்று பேர் சூட்டினார்.. இப்படியாக இஸ்ரவேல் என்ற பெயர் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தது.
6. யோசேப்பு எகிப்துக்கள் பிரவேசித்தல (ஆதி 39-47)
இந்த யோசேப்பின் சரித்திரம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நிழலாட்டமாக இருப்பதை பார்க்க முடியும். யாக்கோபு(இஸ்ரவேல்) 12 குமாரர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் யோசேப்பை பகைத்தார்கள் அதில் யூதா என்பவன் வௌளிக்காசுக்கு விற்றுப்போட்டான். பாவமறியாதவனை பாவி என்று சிறைச்சாலையில் தள்ளினர். அவனோடு இரண்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவனுக்கு மீட்பு கிடைத்தது மற்றவனுக்கோ மரணம் கிடைத்தது. வேளை வந்தது பார்வோன் யோசேப்பை உயர்த்தி சகல அதிகாரங்களையும் அவனுக்கு கொடுத்தான். 7 ஆண்டுகள் பஞ்சம் வந்தது (மகா உபத்திரவகாலம்) உலகத்தில் அனைவரும் ஜீவன் தப்புவதற்கு யோசேப்புவினிடத்தில் சென்றார்கள்…. அங்கே இஸ்ரவேல் குடும்பத்தாரும் தஞ்சம் புகுந்தார்கள். இவ்வண்ணமாக ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குதத்தம் நிறைவேறுகிறது. (அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். ஆதி 15:13)
7. மோசே ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டுவருதல் (யாத் 3-40)
இஸ்ரவேலர்கள் 430 ஆண்டுகள் எகிப்திலிருந்து 25 லட்சமாக பெருகினார்கள். அங்கே யோசேப்பு இறந்த பிற்பாடு வேறே ராஜாக்கள் தோன்றி அவர்களை அடிமையாக்கினர்கள். அப்பொழுது மோசேயை கர்த்தர் ஏற்படுத்தி ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார். 40 ஆண்டுகள் இவர்கள் வனாந்திரத்தில் கால்நடையாக பயணித்தார்கள். புசிக்க மன்னாவையும் காடையும் கொடுத்தார். அதோடு மோசேக்கு நியாயப் பிரமாணம், வாசஸ்தலம் மற்றும் பணிமூட்டுகளின் மாதிரியையும் கொடுத்தார். அன்பானவர்களே எகிப்துக்கு ஏன் இஸ்ரவேல் மக்கள் சென்றார்கள் என்று புரிந்து விட்டதா?
8. யோசுவா கானானை சுதந்தரித்தல்
40 ஆண்டு பயணங்களுக்கு பிற்பாடு இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியின் கிழக்கு பகுதியைப்பிடித் தார்கள் அப்பொழுது மோசேக்கு பிற்பாடு கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தும்படியாக யோசுவாவை தெரிந்துகொண்டார். அவர்கள் யோர்தான் நதிவழியாக கடந்து எரிகோவைப் பிடித்து கானானுக்குள் பிரவேசித்தார்கள். யோசுவாவுக்கு பிற்பாடு தனிப்பட்ட தலைவர்களால் நியாயம் விசாரித்தார்கள் அவர்கள் நியாயாதிபதி என்று அழைக்கப்பட்டனர்.
9. இராஜாக்களின் காலம்
இஸ்ரவேல் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கர்த்தர் ராஜாக்களை ஏற்படுத்தினார். சவுல் முதல் இராஜாவாக இருந்தான், தாவீது மற்றும் சாலமோன் இராஜாக்களாக இருந்தார்கள். சாலமோனுடைய காலத்தில் தேவாலயம் கட்டப்பட்டது. பிற்பாடு இராஜ்யம் பிரிந்தது வடக்கு நாடு இஸ்ரவேல் என்றும் தெற்கு நாடு யூதேயா ஆக மாறியது.
10. இஸ்ரவேல் சிறைபிடிக்கப்படுதல்
இஸ்ரவேல் (2ராஜா 12-25) சுமார் 200 ஆண்டில் 20 ராஜாக்கள் ஆண்டு எல்லாரும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து அடிமைகளாய் அசீரியர்களால் சிறைபிடிக்கப்ட்டு கொண்டுபோகப்பட்டனர்.
11. யூதா சிறைபிடிக்கப்படுதல்
யூதாவில் 19 ராஜாக்களும் ஒரு ராணியும் ஆளுகை செய்தனர். சிலர் கர்த்தருக்கு பிரியமாகவும் சிலர் பிரியமில்லாமலும் ஆட்சி செய்தார்கள். இவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டனர். சாலமோன் கட்டிய ஆலயம் சுட்டெரிக்கப்பட்டது
12. 70 ஆண்டுகள் பாபிலோனில்
2 நாளாகமம் 36:5-27 ன் படி யூதேயா ஜனங்கள் 70 ஆண்டுகள் பாபிலோனில் அடிமைகளாக இருந்தனர். தானியேல் இருந்ததையும் நாம் பார்க்க முடியும். மீதியர் மற்றும் பெருசியர் கையில் பாபிலோன் அகப்பட்டபின்பு யூதர்கள் எருசலேமுக்கு திரும்பினார்கள்.
13. எருசலேம் நோக்கி
மூன்று குழுக்களாக மூன்று தலைவருக்கு கீழ் திரும்பினார்கள்
Þ செருபாபேல் தேவாலயத்தை கட்டினார்
Þ எஸ்றா ஆசாரியனாக வந்தார்
Þ நெகேமியா எருசலேமின் அலங்கத்தை கட்டினார்
15. இடைப்பட்டகாலம்
இந்த இடைப்பட்ட காலத்தில் யூதர்கள் திரும்பி தங்கள் நாட்டிற்கு வந்தாலும் மற்ற சக்கரவர்த்திகளின் பிடியில் இருந்தார்கள். இந்த சக்கரவர்த்திகளை குறித்து தானியேல் 2:31-45ல் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். அவைகளை தனித்தனியே பார்ப்போம்
1. பாபிலோன் - கி.பி 500 ல் யூதர்கள் அடிமையாக 70 ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள் (தானியேல் 2:37-38)
2. பெர்சியா- கி.பி 400ல் பெர்சியா (மீதியானி-பெர்சியன் சக்கரவர்த்தி) பாபிலோனை முற்றுகைப் போட்டார்கள் அப்பொழுது நெகேமியா யூதேயாவுக்கு திரும்பி வந்தார்
3. கிரேக்கர்-கி.பி 300 ல் மகா அலெக்ஸ்சாண்டரால் பெர்சியா முற்றுகைப் போட்டு முழு மேற்கைய நாடுகளையும் தனது 32 வது வயதில் பிடித்து இறந்தான் அப்பொழுது நான்கு ஜெனரலர்களால் பிரித்து ஆண்டார்கள்-மெக்கதோனியர், துர்க்கி, சிரியா, எகிப்து
4. ரோம்- கி.பி 50 ல் ஜூலியஸ் சீசர் உலக சக்கரவர்த்தியாக உருவெடுத்தார்.
கி.பி 44ல் கொல்லப்பட்டபின்பு அவருடைய மருமகனான அகஸ்துஸ் சீசர் எகிப்தின் கிளியோப் பட்ராவை மேற்கொண்டு பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார்.
அந்தியோப்பின் மகனான ஏரோது யூதர்களுக்கு மேலாக அரசாள ரோம அரசால் ஏற்படுத் தப்பட்டது. ஏரோது ஆரம்பத்தில் யூதர்களோடு நல்ல அணுகுமுறையாக இருந்தான்.
ஆட்சி பீடத்திற்காக தன் மனைவியையும், பிள்ளைகளையும் கொலைசெய்தான் யூதாவை ஆட்சி செய்ய இயேசு பிறந்து விட்டார். ஆகவே 2 வயதுக்குட்பட்ட யூதர்கள் ஒவ்வொருவரையும் கொலை செய்தான். மத் 2:16
16. வந்தவராகிய மேசியா
வாக்குதத்தத்தின்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவிகளாகிய நம்மை இரட்சிப்பதற்கு இப்புவிக்கு ஒரு மனிதனாக பிறந்து வந்தார். அநேக அற்புத அடையாளங்களினால் தேவத்துவத்ததை வெளிப்படுத்தினார் இரத்தம்சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை… ஆகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பலிக்கிடாவாக மாறினார். மூன்றாம் நாள் அவர் உயிர்தெழுந்தார். அவருடைய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு கிடைத்தது.
17. பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை
வாக்குதத்தத்தின்படி கடைசி காலத்திலே மாம்சமான யாவர்மேலும் ஆவியானவர் பொழிந்தருளப்படுவார் என்பதின்படி பெந்தெகோஸ்தே நாளில் ஆவியானவர் பலமாக பொழிந்தருளினார். இப்பொழுதும் அதே ஆவியானவர் பொழிந்தருளிகொண்டிருக்கிறார்.
18. அப்போஸ்தலரின் ஊழிய பயணம்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சீடர்களுக்கு கட்டளையிட்டதின்படி அவர்கள் சகல ஜாதிகளிடத்தில் சென்று சுவிஷேசம் அறிவித்தார்கள். அங்கே அநேகர் இரட்சிக்கப்பட்டனர், அற்புத அடையாளங்கள் நடந்தன. அநேக சபைகள் நிறுவப்பட்டது
முதல் ஊழிய பயணம் (ஆப் 13-14)
பவுலும் பர்னபாவும், மாற்கும் சீப்ரு மற்றம் கலாத்தியாவுக்கு மேற்கொண்டனர்.
இரண்டாவது ஊழிய பயணம் (ஆப் 16-18)
ஆந்தியோகாவிலிருந்து பவுலும் சீலாவும் ஊழிய பயணம் மேற்கொண்டார்கள்
மூன்றாவது ஊழிய பயணம் (அப் 19-21)
எபேசுக்கு ஊழியம்
19. வருகிறவராகிய மேசியா வெளிப்பாடு
அருமையானவர்களே வருங்காரியங்களையும் கடைசிகாலங்களின் வெளிப்பாடும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ரகசிய வருகையும், பகிரங்க வருகையும், நியாயத்தீர்ப்பும் மற்றும் ஆயிர வருட அரசாட்சியையும் வெளிப்படுத்தின சுவிஷேசத்தில் நாம் பார்க்க முடியும்.
இவைகளை படித்துக்கொண்டிருக்கும் போதே உங்களுக்கு வேதாகமத்தின் நிகழ்வுகள் புரிந்திருக்கும்.. தொடர்ந்து பரிசுத்த வேதாக்தை படிக்கும் பொழுது இன்னும் அநேக காரியங்களை விளங்கிக்கொள்ளலாம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.